யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சபாரெத்தினசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் நல்லதம்பி சபாரெத்தினசிங்கம் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 02-11-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் புங்குடுதீவு கல்லடி அம்மன் கோவில் புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 04-11-2023 சனிக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அமரரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
6ம் வட்டாரம்,
புங்குடுதீவு.