Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAR 1964
இறப்பு 29 NOV 2013
அமரர் நல்லதம்பி பரமேஷ்வரன் 1964 - 2013 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசலை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி பரமேஷ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-12-2023

ஆண்டுகள் ஒவ்வொன்றாய் பத்தாண்டு ஆனதப்பா
அடுக்கிவைத்த உன் நினைவுகளே எமதிருப்பாய் போனதப்பா
அகம் முழுதும் உன்முகமே அலை அலையாய் நிறையுதப்பா
அயர்ந்து நாம் உறங்கையிலும் அருகில் நீயென்று உணர்கிறோமப்பா
நடக்கிறாய் எம் கைபிடித்து விழித்தால் நீ இல்லையப்பா
வழியிலுன் சாயலிலே யார் கடந்து போனாலும் தவிக்கிறோம் அப்பா
தவிக்கின்ற போதிலெல்லாம் சிரிக்கின்ற உன் முகமே விழிகளில் தெரியுதப்பா
பிரியமான எம் தந்தையே நினைவுகள் உனதானதால் வருடங்கள் பூச்சியம் தான்
காலங்கள் கரையட்டும் ஆண்டுகள் பலவாகி மறையட்டும் நாம்
ஞாலத்தில் சுவாசிக்கும் நொடியெல்லாம் நீயிருப்பாய் எம் நெஞ்சத்தில் நிறைவோடு 

தகவல்: தாய், மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள்