யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சின்னத்தம்பி அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தையல்நாயகி(அளவெட்டி), கைலைநாதன்(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(கனடா), விமலநாதன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கோபாலநாதன்(கனடா), விக்கினராஜா(ஜேர்மனி), கலாவதி(அவுஸ்திரேலியா), அருந்ததி(சோதி- லண்டன்), அருணகிரிநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகசுந்தரம், சாந்தநாயகி, பாலயோகினி, நிர்மலா, கமலநாயகி, திலகராஜன், கலைவண்ணன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
தினேஷ், புங்கவி, டிசாந்த், சங்கவி, பிரிட்னி, அருண், அனந்தினி, வினுஷகன், சின்மயன், சிந்துரன், சிவகாமி, ஆருண்யன், அங்கர்ஜன், அனோஜன், பைரவி, ரமணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தியா, கீரன், கேஷவ், ஏய்ஸ் ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்