5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லையா கமலலோசனி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டு
ஐந்து ஆனாலும் உங்கள் ஆசைமுகம்,
நேசப்புன்னகை மறையவில்லை.....!
நேற்று போல் இருக்கிறது
உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை நினைக்கையிலே
ஏன் எங்களை மறந்தீர்கள்!
நாங்கள் உங்களை பிரியவில்லை - ஆனால்
நீங்கள் எங்கள் அருகில் இல்லை
உங்களை யாசிக்கிறோம் - அதைவிட
உங்களை நேசிக்கிறோம்...
எம் மூச்சு காற்றோடு மட்டும் தான்
உம் உரசல்கள் நீங்கள் காற்றோடு தானே கலந்துவிட்டீர்கள்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
வரகவி கிருஷ்ணப்பிள்ளையின் மகள்
சொர்க்கவாசல் அன்று கிருஷ்ணர் பாதம் அடைந்தார்.
தகவல்:
குடும்பத்தினர்