

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா திருவருட்செல்வன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 24-01-2023
நேற்றுத்தான் நடந்தது போல்
அந்த கொடுமையான மணித்துளிகள்
ஒராண்டு கடந்து விட்டதாம்
நாட்காட்டி சொல்கிறது!!
இதயமென்னும் கோயிலிலே
தெய்வமாக நிறைந்தீர்கள்!
எங்களால் நம்ப முடியவில்லை
ஓராண்டு கடந்து போனதை!!
நீங்கள் பேசிய வார்த்தைகளும்
சொன்ன அறிவுரைகளும்
உங்கள் சிரிப்பின் சத்தமும்
எங்கள் செவிகளில் இன்னும் கேட்கிறது!!
இறைக்கே இணையாகி வானிற்கு
நிகராகி பேரன்பின் இலக்கணமானவரே!
மணிமகுடம் அணியாத
எங்கள் வீட்டு அரசன் நீங்கள்!!
அன்பின் சிகரமாய் அரவணைப்பில்
அன்னையாய் வாழ்விற்கே
அர்த்தமாய் வாழ்ந்து காட்டிய
உங்களை தினம் எண்ணி போற்றுகின்றோம்!!
வார்த்தைகளில் வடிக்க முடியாது
நீங்கள் இல்லாத வெற்றிடத்தை!
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் புன்னகைபூசிய வதனம்
மனதை விட்டகலவில்லையே!!
எங்களின் வளமான வாழ்விற்கு
வழிகாட்டியாக நின்றீர்கள்!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம்
மீண்டும் நீங்கள் எம்மிடத்தில் வர வேண்டும்!!
உங்களின் புண்ணிய
ஆத்மா நித்திய இளைப்பாற
அன்னை இராஜமகாமாரியை இறைஞ்சுகின்றோம்!!