

திதி : 10-05-2025
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லையா இராசம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
தாயாய் எனைத் தாங்கியவளே
தமையனாய் எனைப் பார்த்தவளே
வீட்டு வாசலில் நின்று எனை வரவேற்று என்
வயிறாற உணவுதனை ஊட்டியவளே
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றேன் அன்னையே
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தேனோ அன்னையே!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நிகழ்வு 10-05-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 33, D8 2ம் குறுக்கு உருத்திரபுரம், கிளிநொச்சி எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். பேரப்பிள்ளைகள் கார்த்திகா குகராஜ். பூட்டப்பிள்ளைகள் தக்ஷிகா, அஸ்வின்,ஆதிரா.