யாழ்.புத்தூரைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நளாஜினி நல்லையா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு நளாவே!
எங்கு சென்றுவிட்டாய்?
ஏனிந்தத் தொலைதூரம்?
விடிவை வெறுத்து
இரவைத் தேடுகிறோம்
நிலவில் பூத்த மலராய்
நீ வருவாயென.
நீ இருந்த போதெல்லாம்
இருந்து விட்டோம் எமை மறைந்து
நீ மறைந்த நொடிக்கணமே
நொருங்கியது எம் இதயம்
பாசத்திற்கு இலக்கணமாய் இருந்தவளே
எமைப் பாதியிலே பரிதவிக்கவிட்டுச்
சென்றாயோ.....
இன்று
நீங்கள் இடம்பிடித்து நித்தமும்
புன்னகையுடன் வலம் வந்தவளே....
எங்கள் அன்புச் செல்வம் நிலாவே...
இன்று உன் உருவம் காணாது
உருகுகிறகு உள்ளங்களெல்லாம்.
விடைதெரியா வேதனைக்கு விடை
காணத் துடிப்பதே எங்கள் வேதனையாயிற்று
ஏனிந்த வேதனை எங்கள்
வாழ்வில் வந்த சோதனை
எத்தனை காலம் தான் ஏங்குவதோ?
நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும் எம்முடன் நிரந்தரம் தான்
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.