10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்சைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா அகவன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!
ஆண்டுகள் பத்து ஆனதடா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியே
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோமே
காலங்கள் எத்தனை கடந்து போனாலும்
உன் பிரிவிலிருந்து மீண்டு வருவதற்கு
இந்த ஜென்மமல்ல எந்த ஜென்மமும் போதாதய்யா
என்றும் உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்