Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUL 1937
இறப்பு 07 JUN 2019
அமரர் நகுலேஸ்வரி தியாகராசா
வயது 81
அமரர் நகுலேஸ்வரி தியாகராசா 1937 - 2019 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நகுலேஸ்வரி தியாகராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலச் சுழற்சியில் ஐந்தாண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை

பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!

ஓயாது உம் குரல் இனிமை
எதிரொலிக்க ஒவ்வொரு கணமும்
நினைத்து நினைத்து அழுகின்றோம்

திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்