மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி தர்மலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி 17-12-2022 சனிக்கிழமை அன்று நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதிய உணவு நிகழ்வு தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது அன்னாரின் நினைவு அஞ்சலி, மலர் வெளியீடு மற்றும் மதிய உணவில் கலந்து சிறப்பிற்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
சித்திரமேழி ஞானவைரவர் ஆலய பரிபாலன சபை, காரைநகர் பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்கள நண்பர்கள், Cololmbo Intec Systems & Solutions, Cololmbo Mount King Hotel ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சுழிபுரம் நாவலர் சனசமூக நிலையம் மற்றும் பறளாய் விளையாட்டுக்கழகம், சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம், சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி A/L 1996 & 2000 நண்பர்கள், ஓமான் நண்பர்கள், வெள்ளவத்தை நண்பர்கள், சண்முகசுந்தர கல்வி நிலைய பழைய மாணவர்கள், தாசன் கல்வி நிலைய பழைய மாணவர்கள், கரவெட்டி சொர்க்கம் அமைப்பு, சுழிபுரம் வசந்தம் அமைப்பு, சித்திரமேழி உறவுகள், நெல்லியடி கரவெட்டி உறவுகள், சுழிபுரம், பண்ணாகம், தொல்புரம், மூளாய், பனிப்புலம், பொன்னாலை நண்பர்கள், தென்மராச்சி - மந்துவில் நண்பர்கள், கிளிநொச்சி மற்றும் மட்டகளப்பு உறவுகள், வடக்கு யோகர் கார்த்திகேசு அறநெறி நண்பர்கள், சுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் மற்றும் முருகன் ஆலய ஐயாக்கள், முகப்புத்தக நண்பர்கள், புலம்பெயர் சுழிபுரம், சித்திரமேழி, கரவெட்டி உறவுகள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக தொடர்புகொண்டவர்கள் அனவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.