Clicky

பிறப்பு 27 SEP 1969
இறப்பு 25 NOV 2020
அமரர் பாலசிங்கம் நகுலேஸ்வரன்
வயது 51
அமரர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் 1969 - 2020 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Naguleswaran Balasingam
1969 - 2020

நண்பனின் மறைவு,இழப்பு ..................................... அன்புள்ள நண்பா! நகுலா!! உனது திடீர் மறைவு மறப்பதற்கு மிகவும் கசப்பானது, உன்னை மிகவும் நேசிக்கும் நண்பர்களுக்கு உன்னை மறப்பது மிகவும் கடினமாக இருக்கும், உனது கடைசி நிமிடங்களில் நீ எவ்வளவு கஷ்டப்பட்டாயோ? என்ன நினைத்தாயோ? எங்களுக்குத்தெரியாது . ஆனால் உனக்கு விடை கொடுக்க மனம் தயங்குகிறது. நண்பா!! நாங்கள் எல்லோரும் எங்கோ பிறந்தோம், எங்கோ வழர்ந்தோம், ஆனால் என்று சந்தித்தோமோ அன்றிலிருந்தே மிகவும் ஜக்கியமாகிவிட்டோம். நாம் கடந்துவந்த பாதையோ மிகவும் கடினமானது, ஆனால் நாங்களோ மனம் தளரவில்லை. எங்கள் வாழ்கையை நாமே இனிமையாக்கிக்கொண்டோம். எத்தனையோ சோகங்கள், எத்தனையோ சந்தோசங்கள் அத்தனையிலும் பங்கேற்றோம், ஆனால் நீ இன்று எங்களுடன் இல்லையே என்பதை ஏற்க ஏனோ எங்கள் மனது மறுக்கிறதே நண்பா!! 4 cornwallis dr, வீட்டு படிக்கட்டு சொல்லும் எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை. எத்தனை சந்தோசம், எத்தனை துக்கம், எத்தனை நண்பர்கள், எத்தனை ஆச்சரியங்கள், இவையெல்லாம் நம் கண்முன்னே வந்து போகிறதே நண்பா!! எங்கள் நட்புச் சங்கிலி உடைந்துவிட்டது, பழமைபோல் எதையும் எதிர்பார்ப்பது கடினம்,இருந்தாலும் இறைவன் அழைப்பை நம்மால் மறுக்க முடியாது. இறைவன் ஒவ்வொருவராக அழைக்கிறான்,எங்கள் நட்ப்புச்சங்கிலி மீண்டும் இணையும். மீண்டும் உன்னை சந்திக்கும்வரை உனது ஞாபகங்கள் எங்கள் மனதில் அலைமோதிக்கொண்டேயிருக்கும். மீண்டும் சந்திப்போம் நண்பா , அதுவரை சற்று இளைப்பாறு. ???????? கொக்குவில் நண்பர்கள் .

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 11 Dec, 2020
நன்றி நவிலல் Fri, 25 Dec, 2020