யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அம்மா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அம்மா!
தரணியில் உம்மை எப்போ காண்போம் அம்மா!
உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
அன்னாரின் பிரிவுச்செய்தி அறிந்து நேரில் வந்தும் இறுதிக்கிரிகைகளிலும் கலந்து கொண்டு எமக்கு ஆறுதல் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று திருக்கேதீஸ்வரம் தீர்த்த கரையில் நடைபெற்று பின்னர் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் இல. 5A/A, பழைய கச்சேரி வீதி, கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.