
யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி ஜெகநாதன் அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான A.K சுப்பிரமணியம் பகவதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பாக்கியநாதன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகநாதன்(முன்னாள் ஆணையாளர் - போக்குவரத்துத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனந்தகுமார்(அவுஸ்திரேலியா), தாரிணி(பிரான்ஸ்), தயாளினி(கனடா), கிஷோக்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாரா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியும்,
பேராசிரியர் சோதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), ஞானேஸ்வரி(கனடா), விக்னேஸ்வரி(பிரித்தானியா), Dr. கேதீஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்ஷினி(பிரித்தானியா), சிவா(பிரித்தானியா), காயா(பிரித்தானியா), மீரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
தீபா(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு பெரிய மாமியும்,
தர்ஷி சக்திவேல், சஞ்ஜி, ஆனந்த் ஆகியோரின் அன்பு மாமியும்,
ரகு(Raghu Aunty) அவர்களின் உற்ற நண்பரும்,
ஹரி, ஹரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரி்ன் பூதவுடல் 21-06-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest sympathies for the unexpected loss of our dearest friend and college mate May her soul Rest In Peace