யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகராசா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரியரட்ணம்(பஞ்சலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரன்(ராசன்), வசந்தாதேவி(கிரிசா), கிரிதரன், சசிதரன்(ஆபிரகாம்), காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலராயா, செல்வராணி, சண்முகராயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி, நவீந்திரராயன், சிவதர்சினி, றூபா(சாரா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, மகேஸ்வரி, சர்வேஸ்வரி(லிடியா), கமலராணி, காலஞ்சென்ற நடராயா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபன், சரன்யா, சயதீபன், கேலா, அனீக்கா, சமீக்கா, வித்தகன், ஆர்த்திகன், யோனத்தான், யோயேல், மார்க் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஸ்னா, அரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May her soul Rest in Peace.