5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகேசு வரதராஜசிங்கம்
வயது 59
அமரர் நாகேசு வரதராஜசிங்கம்
1955 -
2015
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 05ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இராமநாதபுரம், வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேசு வரதராஜசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்பு மனைவி, பாசமிகு பிள்ளைகள்,
ஆசைமிகு பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
It was truly a pleasure working with the beautiful human being. I will deeply missed the presence.