Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 23 JUL 1942
விண்ணில் 08 SEP 2025
திரு நாகேசு சாந்தலிங்கம் 1942 - 2025 வேலணை மேற்கு சிற்பனை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 8ம் வட்டாரம் புளியங்கூடல் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேசு சாந்தலிங்கம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு தர்மச்செல்வி தம்பதிகளின் அன்பு மகனும், இராசரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற சரசமலர்(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்), பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குமுதன்(கனடா), விஜிதா(ஜேர்மனி), வினோதா(வினோ), ஜனகன்(பிரான்ஸ்), அருளினி(அரு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தா, ஜெகதீசன்(சிங்கம்), ஜெகதீஸ்வரன்(ஜெகா), தமிழினி(றாதி), சுவேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிஷனா, அஸ்விகா, அபிரன், ஜெசிந்தன் றம்மியா, கெளசிகா, யதுஷா, ஜீவனா, இலக்கியா, அற்சயா, தபிஜன், காலஞ்சென்ற தர்வின், தஸ்வின், கீர்த்தன், கினுஷன், கிஷான் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

பிரகலாதனன்(ராசன் - ஜேர்மனி), காலஞ்சென்ற வேல்முருகன்(வடிவேல்), ஜெகதீசன்(சிங்கம்- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாய்மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, கைலாசபிள்ளை , அம்பிகைபாலன், புஸ்பகலாராணி(அவுஸ்திரேலியா), வசந்தகுமாரி, பவானந்தராணி, மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,

கிருஸ்ணபாலன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கணநாதன்(குட்டி), ஆனந்தரூபன், வசந்தகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமுதன் - மகன்
விஜிதா ஜெகதீசன்(சிங்கம்) - மகள்
வினோதா - மகள்
ஜனகன் - மகன்
அருளினி - மகள்

Photos

Notices