10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் நாகேந்திரம் ஞானாம்பிகை
1927 -
2013
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், வசாவிளான் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் ஞானாம்பிகை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-02-2023
சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே அன்னையே!
இப் பூவுலக வாழ்வுதனை நீத்து
ஆண்டு பத்து கடந்ததுவோ?
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
என்றென்றும் எழிலோடு எங்கள் நெஞ்சிலெ நீ வாழ்வாய்!!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்