Clicky

பிறப்பு 12 DEC 1939
இறப்பு 07 OCT 2026
திரு நாகரட்ணம் சிவராமா
வயது 86
திரு நாகரட்ணம் சிவராமா 1939 - 2026 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பித் தொழும். (திருக்குறள்: 260) தன் வாழ்க்கையில் எவ்வுயிரையும் தன்னுயிர் போல் நேசித்த மனித நேயன் பொறியியலாளர் அமரர் சிவராமன் அவர்கள். பால் குடிப்பதே பசுவின் குருதியைக் குடிப்பதாக எண்ணும் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொணடு வாழ்ந்து காட்டிய அருமைமிகு மனிதர். தன்னுயிர் போல் மன்னுயிரையும் நேசித்த அற்புதமான மனிதர். அவரோடு பழகுவதே இனிமை. மற்றவர்களைப் பாராட்டுவதிலும் அவர்கள் நலன் சார்ந்து ஆலோசனைகள் நல்குவதிலும் மேலானவர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் எனவே வானுறை தெய்வத்துள் வைக்கப்படுவார் என்பதில் ஐயமில்லை. அவரின் எதிர்பாராத மறைவால் பரிதவிக்கும் துணைவி, மகள், சகோதரி மற்றும் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மனபதைபோல் மன்னுயிரைக் காத்திருந்த காவலனே மன்னவனாய் மாநிலத்தில் மதிநிறைந்து வாழ்ந்தவனே மண்ணுலகில் மற்றுயிர்கள் மதிப்புடனே வாழ்ந்திட மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்த பெருந்தகையே விண்ணில் உந்தன் ஆன்மா இறைபத்தில் இணைந்திட விண்ணுலு விரைந்தவரே சாந்தி கொள்க! த.சிவபாலு குடும்பத்தினர்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 07 Oct, 2026
நன்றி நவிலல் Fri, 06 Nov, 2026