8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகரத்தினம் நவரத்தினம்
இறப்பு
- 28 NOV 2017
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் நவரத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள்
எட்டு ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள் நிறைந்திருக்கும்
எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச் சுமந்தல்லோ
நிற்கின்றோம் நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே அங்கே அம்மா
உங்கள் முகம்தானே பட்டொளியாய் தெரிகிறது!
ஆண்டுகள் பல சென்றாலும்- எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும் எம் தாயே
உம் பிரிவால் மீள முடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே..!
தகவல்:
குடும்பத்தினர்