Clicky

பிறப்பு 08 APR 1931
இறப்பு 19 MAR 2020
அமரர் நாகரத்தினம் அருணாசலம் (ஆசை)
வயது 88
அமரர் நாகரத்தினம் அருணாசலம் 1931 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

secretary 24 MAR 2020 Sri Lanka

அயர்ந்துவிட்ட இரத்தினம்....! கொக்குவிலைப்பிறப்பிடமாகக்கொண்ட கொக்குவில் இந்துவின் மைந்தன் வளர்மதியின் சிரேஷ்ட உறுப்பினர் லண்டன் வாழ் சமூக சேவகர் நண்பன் அருணாச்சலம் அருணகுமாரின் பாசமிகு தாயார் அமரர் அருணாச்சலம் நாகரத்தினம் அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்...! ஜந்து முத்துக்களை பூமிக்கு பதித்த இரத்தினமே....! இத்தனை பவளங்கள் மண்ணில் கொட்டிக்கிடப்பினும்... சிறகொடிந்த புற்களாய் துடித்து நிற்கும் குமாரர்களின் இதயங்கள் கசிவதை கேட்டும் மௌனம் காக்கும் அன்னையே அமைதிகொள்வீர்...! சமூக சேவைகளை வரிந்து வாரி வழங்கிடும் அருணாவே...வன்னி தொட்டு யாழ் வரை அருமருந்தென வந்திட்ட தோழனே...! நின் அஞ்சனம் நனைந்திட்ட கணங்களால் கலங்குகிறோம்...! வளர்மதியின் முற்றத்தில் பசுமைகாண நினைப்பவர்.. கொக்குவில் இந்துவின் இதயம் மகிழ தருபவர்... புலத்தில் உள்ள மக்களின் தொப்பூள் கொடி உறவுகளின் உள்ளம் நெகிழ உழைத்திடும் சமூக சேவகரே...அன்னையின் பிரிவு கண்டு துவண்டிட்ட அருணாவே...! நீங்காத துயரமதில் நிழலாக தோள் கொடுத்து நட்பாக துணை நிற்கும் வளர்மதியின் கண்ணீர் பூக்களை அன்னைக்கு காணிக்கை ஆக்குகின்றோம்....! ஓம் சாந்தி சாந்தி சாந்தி..! பிரிவுத்துயரில் வளர்மதி முன்னேற்றக்கழகமும் சனசமூக நிலையமும் நிறைவாழ்வகமும் சம்பியன் வீதி கொக்குவில்

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 22 Mar, 2020
நன்றி நவிலல் Wed, 15 Apr, 2020