அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள்எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு குடும்பத்தினர்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட நாகரத்தினம் நாகேந்திரம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Please accept our condolences. - canada