30ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிந்த நாகரத்தினம் கிருபா அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றவர் உன்னை ஈன்றபோது தம் அன்பு மகனாய்,
ஆசைத்தம்பியாய் பாசமிகு அண்ணனாய்
எம்முடன் சேர்ந்து பலகாலம் வாழ்வாயென
பலகனவுகளுடன் வளர்த்தெடுத்தோம் ஆனால்
அன்னைத் தமிழுக்காய் உதித்த தலைவன் வழிதான்
உன்வழியென்று சென்றாய் நெருபாற்று நீச்சலில்
வீரவேங்கையாகி முப்பது வருடங்கள் ஓடிமறைந்தாலும்
முப்பொழுதும் உன் நினைவுகளுடன் நாம் இங்கு
வலிசுமந்து நிற்கின்றோம் விதைகளாய் விழுந்தவர்கள்
நீங்கள் பெருவிருட்சங்களாவீர்கள் உங்கள் கனவு
நனவாகும் காலம் வெகுதூரமில்லை
நீங்கள் விட்ட மூச்சு எங்கள் தமிழீழ மண்ணில்
சுதந்திரகாற்றாக வீசும் இது உறுதி
தமிழீழ மண்ணுக்காய் வித்தாகிய
அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்
தகவல்:
குடும்பத்தினர்
எமக்காகவும் எம் மக்களுக்காகவும் உங்களின் இன்னுயிரை ஈன்ற மாவீரனுக்கு எமது வீர வணக்கங்கள். தமிழரின் தாயகம் தமீழீழ தாயகம்