Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JAN 1948
இறப்பு 20 MAR 2025
திருமதி நாகராசா நாகம்மா 1948 - 2025 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் இளமைக்காலயை வதிவிடமாகவும், ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டலை வசிப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளம் ரகுபாக்கத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா நாகம்மா அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மகுமார்(குமார்- லண்டன்), சிவகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராம்குமார்(ராசன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சோபனா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

கெளசலாதேவி(லண்டன்), நேசராசா(பிரான்ஸ்), சஜீவன்(தபால் ஊழியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிலக்சி, வினோத்(லண்டன்), சஜீர்த்தனா, சங்கீர்த்தனன்(பிரான்ஸ்), ஷன்சனா, கரிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை சிவபாதம், பரமேஸ்வரி மற்றும் செல்லம்மா கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், தவமணி, இராசம்மா, தங்கமலர், சிவயோகன் மற்றும் புவனேஸ்வரி, இராசையா, காலஞ்சென்றவர்களான சிவகெங்கை, நடராசா, சிவஞானம், வள்ளிப்பிள்ளை, செளந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல. 353/15 ரகுபாக்கம் வீதி வேப்பங்குளம், வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தச்சனாங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
சிவகுமாரி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் பெரியம்மா(ரேகா), பேரப்பிள்ளைகள் அபிலாஷ், அக்‌ஷயன், அதேஷ் - பிரித்தானியா

RIPBook Florist
United Kingdom 16 hours ago