மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா Toronto, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா தனலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-06-2023
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்’
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
பன்னிரு மாதங்கள் சென்றதம்மா!
என்ன நடந்தது ஏது நடந்தது என்று கணக்கிட்ட
நாட்கள் அதற்குள் ஆண்டு ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!
அன்று எம்முடன் வாழ்ந்து மறைந்தீர்கள்
இன்று எம்முடன் மறைந்து வாழ்கின்றீர்கள்.
பிறப்பு, இறப்பு இணைந்தது எனினும்
இழப்பினை நெஞ்சம் ஏற்பதில்லையம்மா!
இந்த உடலும் உயிரும் உங்களது என்றாலும்
கண்ணீரும் கவலைகளும் எங்களது ஆகிற்றே!
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் நித்திய சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
‘ஆன்மா என்றென்றும் அழியாது’
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We miss you Amma😭😭😭 Your children