யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராஜா நந்தகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்டதூரம் சென்று ஆண்டு ஐந்து
கடந்தாலும் அழியவில்லை உங்கள் நினைவுகள்
அகலவில்லை உங்கள் அன்புமுகம்!
காற்றுக் கூட போக இடமில்லாது
எம்மிதயத்தில் அன்பு ஊற்றாய் நிறைந்து நின்ற
நீங்கள் எம்மை விட்டு வேற்றாய் மறைந்ததேன்
இங்கு நீங்கள் இன்றி நாங்கள் தவிக்கின்றோம்
உங்களோடு நாங்கள் கழித்த பொற்காலம்
மீண்டும் வருமா? ஏங்கி நிற்க்கின்றோம்
அன்பாலும் பண்பாலும் அனைவர்
உள்ளமும் நிறைந்தாயே
உங்கள் இழப்பால் உணர்ந்தோம்
வாழ்வு அது நிஜமில்லை என்று
எல்லா உறவுகளையும் ஏங்கி தவிக்கவிட்டு
வெகு விரைவாக எங்கு சென்றீர்கள்!
உங்களை எம் வாழ்நாள்
உள்ளவரை எம் இதயத்தில்
வைத்து வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.