யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகராசா கணபதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 13-11-2021
எங்கள் குலவிளக்கே
எங்கு பார்த்தாலும் நம் கண்ணுக்குள்
உங்கள் முகம் தெரிகிறதே
என் தெய்வமே
ஏன் தான் திடீர் என்று எம்மை
துடியாய்
தவிக்க விட்டு சென்றீர்கள்
ஒருமுறை உங்கள் அன்பான முகம்
பார்க்க
தேடித்தேடி அலைகின்றேனே
எத்தனை ஆண்டுகள் போனாலும்
எம்மால் உங்களை மறந்து வாழ முடியாதப்பா
ஏன்தான் எனக்கு இந்த வேதனை
ஆளத்துயிலில் துடியாய் தவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்
எம் தந்தையே!
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உங்களைப் போன்று அன்புக் காட்ட
யாரும் இல்லை அப்பா
உங்கள் வியர்வையில் நாம் வாழ்ந்தோம்
மீளாப் பிரிவில் தாளாது தவிக்கின்றோம்
தவிப்புகள் எதுவானலும் உன் முகம்
மலர்ந்த சிரிப்பை எப்போ எங்கே காண்போம்