யாழ். நயினாதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி 7ம் யுனிற் கல்மடுநகர் இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா அன்பழகன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Sri Sathya Sai baba Centre of Scaborough 5321 Finch Ave E, Scaborough , ON M1S 5W2 எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Sri Sathya Sai baba Centre of Scaborough
5321 Finch Ave E,
Scaborough , ON M1S 5W2