யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Möhlin யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா யோகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31ம் நாளும் உங்களைப் பிரிந்து நாட்கள் முப்பதொன்று
கழிந்து போனாலும் முப்பொழுதும் எப்பொழுதும்
உங்கள் நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்
பழகி வந்த ஆசைமுகம் பாதியிலே மறைந்தாலும்
எழுதி வைத்த ஓவியம் போல் எங்கள் இதயத்தில்
நீங்கள் இருப்பீர்கள் எம் அன்பை உங்கள் காலடியில்
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்.
ஒம் சாந்தி....ஒம் சாந்தி..ஒம் சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலைபேசியூடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும் உணவு தந்து உதவியவர்களுக்கும் இன்று வரை எமக்கு சகல உதவிகளை செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்