
யாழ். தெல்லிப்பழை கட்டுவன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகர் தர்மலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் ஆதார வாழ்வின் வழி நீரே ஐயா
இன்று ஆறாகி வழியுது எம் விழி நீரே..!
கணப்பொழுதும் எண்ணவில்லை - எம்
கலங்கரை விளக்கே .....நீ
இமைப்பொழுதில் எம்மை விட்டகல்வாயென.
ஆலமரமாய் இருந்தீர்கள் ஆனந்தமாய் நாம் இருந்தோம்
ஆலமரம் சரிந்ததனால் ஆனந்தமும் குறைந்தது அப்பா
உருவம்தான் இல்லையப்பா உணர்வாய் உடன் உறைகின்றீர்கள்
உயிருடன் எம்மோடு உடனிருந்து வழி நடத்துகிறீர்கள்
உங்கள் நினைவுகள் மட்டும் வளர்பிறை போல்
வளர்ந்து கொண்டே போகிறது அப்பா!
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!