
யாழ். சரவணை கிழக்கு பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதி வரதராசா அவர்கள் 06-07-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கபிசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பத்மநாதன், அன்னபூரணி, பரமானந்தசிவம், காலஞ்சென்ற கருணாநந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சாரதாம்பாள், பத்மநாதன், விமலா, கமலாம்பிகை, சிவகரன், ஞானகரன், வனஜா, சுவிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.