யாழ். துன்னாலை தெற்கு கிளானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் செல்வராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
பத்தாண்டு கடந்துவிட்டன.
எம்மை விட்டுப் பிரிந்து எங்கு சென்றீரோ!
நீங்கள் இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அப்பாவே!
ஆண்டு பத்து ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது சிரித்த முகத்தோடும்
செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
ஆண்டு பத்து கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக்
காத்த அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர்
விதியதால் விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம்
மறைந்தாலும் அழியாது
நினைவலைகள்! பாசத்தின்
பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்..!