யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு உம்பிச்சிபிறேஸ்யை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதன் மங்கையற்கரசி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆருயிர் தாயே அம்மா
இப்பூமியில்- நீங்கள் இல்லை என்பதை என்னும் போது
இடிந்து எரியுது இதயம் அம்மா..!!
அன்பாய் பண்பாய் பாசமாய் எங்களை
அரவணைத்த அன்புத் தெய்வமே
உங்கள் பிரிவின் இடைவெளி
மாதம் ஒன்று ஆகியதோ அக்கா
நம்ப முடியவில்லையம்மா உங்கள் இழப்பை
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்பையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!!
எங்கள் அன்புத் தெயவத்தின ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 07-09-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புங்குடுதீவு கண்ணகையம்மன் புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் இல, 146, கதிரேசன் வீதி கொழும்பு-13 வீரமைலன் மண்டபத்திலும் நடைபெறவுள்ளதானல் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மாசாந்திப் புண்ணியதன கிரியை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.