"கூர்" என்கின்ற அடை மொழியில் அழைக்கப்பட்ட திரு.நாகன் இராசநாயகம் அவர்கள் ஏறத்தாள 40 ஆண்டுகள் நொயிஸ் நகரின் நற் பிரஜையாக வாழ்ந்தவர்.பணிவு,அதிர்ந்து பேசாத மற்றும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத நற்பண்புகளுக்கு உரித்தானவர். - பிறந்த மண்ணுகே உரித்தான கபடமில்லாத பேச்சுவழக்குடன் அங்கதமும் சேர்த்து - அடுத்தவரைச் சிரிக்க வைத்து பின்னர் சிந்த்திக்க வைகும் ஆற்றல் கொண்டவர். புலம்பெயர் வாழ்வில் புரையோடி இருக்கும் "புறம்" பேசும் பழக்கம் அறவே இல்லாத பண்பும் - சக மனிதரை சரியாக உய்த்துணர்ந்து சர்ச்சைகள் இல்லாமல் வாழ்ந்து முடித்தவர்... ஒரு தலைமகனுக்குரிய பற்று, பாசம், பரிவு, விட்டுக்கொடுப்பு, சமரசம் இல்லாத கண்டிப்பு ஆகிய அணிகலன்களுடன் முன் நின்று மறைந்தவர்... அவர்தம் குடும்பதில் அவரை இழந்து - இறுதி அஞ்சலியில் கூட பங்கேற்க முடியாத கையறு நிலையில் வருந்தும் மனைவி,மக்கள்,உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து நாமும் இணைந்து கொள்கின்றோம் ஓம் சாந்தி !