எமது தொப்புள்கொடி உறவே என் தாய்க்கு தாய்மாமனே உனது இழப்பு எமக்கெல்லாம் ஓர் பாரிய பேரிழப்பே…! இறப்பினைக் கடந்து நிற்கும் காலங்கொள்ளா அறப்பொருள் நீ ஓய்ந்ததிவன் உயிரென்றும் தேய்ந்தவுயிர் இது என்றும் சொல்லமனம் ஒப்பலையே ..! இல்லையென்று நீ போனபோதும் இல்லத்தையும் உள்ளத்தையும் அலங்கரித்த உனது உறவுகள் செய்வதறியாது தவிக்கிறோம்.... இறுதியாத்திரை இறந்த உனக்கு நிஜமாகவும் உயிரோடிருக்கும் எமக்கு ஒத்திகையாகவும் இருக்கிறது தேடித் துரத்துகிறது மரணம் வாங்கி வைத்துக் கொள்ள மட்டும் ஏனோ மனம் மறுக்கிறது ஆனாலும் பழக்கப்படுத்த வேண்டும் பூமிக்கு பாரமாய் படைக்கப்பட்டோம் உயிருக்கு நாளுமாய் பிச்சை எடுக்கின்றோம் நிஜத்தைத் தேடிய இறுதிப் பயணத்தில் இன்று நீ ..! நாளை நாமெலாம் …! மறந்திடவில்லை தாத்தா மரணத்திற்கு மிஞ்சியது எதுவும் இல்லை அதற்கு நாமும் விதிவிலக்கில்லை நீ பேசிப்போன வார்த்தைகளும் விட்டுச்சென்ற நினைவுகளும் எமக்கு அறிவுறுத்திப் போகின்றன உன்னுடன் நாம் வாழ்ந்த வாழ்வுக்கான அர்த்தங்களை…! உனதிருப்பின் இனிமையை மீட்கொணர முடியாமலும் உனதிழப்பின் வலியை சகிக்க இயலாமலும் தவிக்கிறோம் மாட்டேனென மறுத்தாலும் விட்டேனா பாரென்பான் காலன் சுற்றம் கூடி அழுதாலும் கூப்பாடுபோட்டு தடுத்தாலும் கூற்றுவன் காலனவன் கூப்பிட்டால் கூடத் தானே போகவேண்டும் வாழ்க்கை சொல்லி தரும் பாடத்தை முழுமையாய் படிக்கும் முன்னரே வந்து விடுகிறது புத்தகத்தின் கடைசி பக்கம் மரணம் என்ற முற்றுப்புள்ளியுடன்…! உனக்காக வாரி வழங்கப்பட்ட எண்ணற்ற இரவுகளாலும் பகல்களாலும் நிரப்பப்பட்ட உன் உயிருக்கு இன்று ஒய்வு கொடுக்கப்படுகிறது ஏங்கித் தவிக்கும் உறவுகளும் உன்னத் தாங்கித்தவிக்கும் பேழையும் சுற்றிஒப்பாரிகளுடன் உறவுகளும் விழிநீர் கசிந்த கண்களுடன் இறுதி மரியாதை செலுத்துகின்றோம் உனது ஆத்மா சாந்தி பெறட்டும் ஓம் …சாந்தி ….சாந்தி…. கண்ணீருடன் றகு குடும்பம்மும் தம்பிப்பிள்ளை குடும்பமும்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. He had a very good full life. I think this is time to go without any sufferings. RIP