Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 20 MAY 1939
மறைவு 09 APR 2026
திரு நாகமுத்து குமாரசிங்கம்
வயது 86
திரு நாகமுத்து குமாரசிங்கம் 1939 - 2026 புத்தூர் மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புத்தூர் மேற்கு நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, புத்தூர் மேற்கு நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து குமாரசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் மாதம் ஒன்று 
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!

அற்புதமான மனிதராய்
நல்லதோர் ஆசானாக, அதிபராக
ஊருக்குள் சுடர்ஒளியாக
திகழ்ந்தீர்கள்...

உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!

எம்மை எல்லாம் ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் பெற்ற
தந்தையாகிடுமோ அப்பா?
உங்களைப் போல் அன்பு கொள்ள
யாருமில்லை..
நாட்கள் 31 சென்றாலும் உங்கள்
பாசத்திற்கு பட்ட கடன் தீராதப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்  

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் நாகமுத்து குமாரசிங்கம் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 07-05-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் 09-05-2026 சனிக்கிழமை அன்று வீட்டுக்கிருத்தியக்கிரியை ந.ப 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
புத்தூர் மேற்கு, நவக்கிரி.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.