

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து காராளபிள்ளை அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று நயினாதீவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சர்வானந்தசிவம், கிருபானந்தசிவம், ரதீஸ்வரி, நீலானந்தசிவம், காலஞ்சென்ற விநாயகசிவம்(கண்ணா), பாலேஸ்வரி, நித்தியானந்தசிவம், குகனேஸ்வரி, கோபாலசிவம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனாவதி, தயாளினி, காலஞ்சென்ற லோகநாதன், அமுதபதி, முருகவேள், தெய்வரஜனி, ஸ்ரீகாந்தமணி, யசோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகம்மா, காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம், சிவக்கொழுந்து, இராசையா, இராசம்மா, கோபாலபிள்ளை, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகரெத்தினம், இலட்சுமி, காலஞ்சென்றவரகளான அமுதலிங்கம், பார்வதி, நாகம்மா, சின்னத்துரை, பாக்யலெட்சுமி, சிவப்பிரகாசம், இராசரெத்தினம், சண்முகரெத்தினம் மற்றும் மகேஸ்வரி, சகுந்தலாதேவி, இந்திராதேவி, பிரேமளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான திருலிங்கநாதன், கந்தசாமி, மற்றும் ஆனந்தசிவம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கோபிநாத், நிலக்ஷனா, தனுராஜ், சரணியா, சரணியன், சாமினி, சஞ்சித், சாலினி, மதுசாகி, நிதுனன், சயனவி, சாரங்கி, தீரன், காருணி, ரம்மியா, சசிகாந், மகிழவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12.12.2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணிக்கு நயினாதீவு சல்லிவரவை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் நாங்களும் எங்கள் கவலைகளையும் பகிர்ந்து கொள்கின்றோம்.அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.