யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து அருணாசலம் அவர்கள் 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னத்தம்பி(மார்க்கண்டு) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளக்கண்டு அவர்களின் அன்புக் கணவரும்,
வதனி(கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), காந்தவதனி(லண்டன்), பத்மவதனி(லண்டன்), காலஞ்சென்ற பவானி, மீனலோஜினி(இலங்கை வங்கி நெல்லியடி கிளை), தயாளினி(ஆசிரியை- யா/முத்துத்தம்பி மகாவித்தியாலயம்), பத்மலோஜினி(ஆசிரியை- வவுனியா விபுலானந்தா கல்லூரி), தர்சினி(ஆசிரியை- யா/இந்துக்கல்லூரி), கஜேந்திரன்(லண்டன்), மயூகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதாரநாதன், தேவகுமார்(ரஞ்சன்- லண்டன்), ஜெயந்தன்(லண்டன்), சதீஸ்(இலங்கை வங்கி- உரும்பிராய்), லோகநாதன்(ஆசிரியர்- யா/ புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி), செல்வரட்ணம்(அதிபர்- வ/ இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலை), முரளிதரன்(மேலதிக அரசாங்க அதிபர், காணி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், குட்டிப்பிள்ளை, கந்தசாமி, சுப்பிரமணியம், நாகம்மாள் மற்றும் வள்ளிப்பிள்ளை(கனடா) அன்புச் சகோதரரும்,
யோகரத்தினம், காலஞ்சென்ற ராஜகோபால், நவரத்தினராஜா(பிரான்ஸ்), சின்னத்தம்பி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மினேஸ், நிரூசி, பிரவிந்தன், ஜெயராம், சர்வேஸ்ராம், வர்ணிகா, கானுஜா, கவீனா, சாகித்தியன், ஆதித்தியன், அக்ஷயன், ஆருஷன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இராசவீதி கோப்பாய் தெற்கு, கோப்பாய் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் வல்வை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்...