Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 18 APR 1945
இறப்பு 21 DEC 2020
அமரர் நாகமுத்து கேதாரம்
ஆசாரியார்
வயது 75
அமரர் நாகமுத்து கேதாரம் 1945 - 2020 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்
படும்.

குறள்-30
(அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை
)

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரடி இல. 40 ஆசீர்வாதப்பர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கேதாரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அப்பா! 
வெள்ளை வேட்டி நெற்றி திருநீறு
கள்ளமற்ற பேச்சு ஆழ்ந்த மென் பார்வை
வெடுக்கென யார்க்கும் வேட்டுவைக்கா மென்குரல்
கடுகளவு பெறினும் காணும் என்னும் மனம்
விடுகதை ஆனால் விடையற்ற வாழ்க்கை
மிதித்த இடமெல்லாம் நற்செயலால் நல்கி
பிள்ளைகளை நன்கு கற்கவைத்த ஆசான்
பிறவிக்கடன் தீர்த்தே அமைதியாகி சென்றீர்
சொல்ல பலது உண்டு சோகம் மிகவே உண்டு
மீண்டும் எமக்குள் பிறந்து தந்தையாக வேண்டும்
அப்பா அப்பா அப்பா அடுக்காய் அழைக்க ஆசை

எமது தந்தையின் இறப்பு செய்தி கேட்டு நேரில் வருகை தந்தும், தொலைபேசியிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் துயர் பகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதுடன் எமது தந்தையின் இறுதி நிகழ்வின் போது சகல வழிகளிலும் இறுதிவரை உதவி புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிருந்திய நிகழ்வு எதிர்வரும் 20-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத் தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும்,அதனை தொடர்ந்து இடம்பெறும் மதிய போசண நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.