7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா இளையதம்பி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஏழு
ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
மீண்டும் ஒருமுறை எமக்காய்
வா தாயே.. விடிய விடிய பேச
எவ்வளவோ இருக்கிறதே
கடவுள் வந்து வரமொன்று கேட்டால்
எங்கள் அம்மாவை
திருப்பித் தா என்போமே.......
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்...
தகவல்:
தங்கா இளையதம்பி(குணம்-மகன்)