5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகம்மா செல்லத்துரை
(புஸ்பமணி)
விண்ணில்
- 18 APR 2018
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா செல்லத்துரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
ஐந்தாண்டு ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்...
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்