யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கெங்காதேவி(நளினி- சங்கானை) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஜா(துளசி- பிரித்தானியா), கெளசல்யா(ஆனந்தி-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூபதிஅம்மா, சிவநேசம்மா, சிவலிங்கம், சிவபாக்கியவதியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரவிந்தன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ராகவி, மயூரா, லஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.