யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் ஸ்ரீ செல்வநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவதில்லை இம்மானிலதே
அண்ணனாய், தம்பியாய், மச்சனாய், மாமனாய், பெரியப்பனாய், சிற்றப்பனாய்
இன்னும் எத்தனை உறவை சொல்லி அழைத்தாலும் அத்தனை
மொத்த உருவமும் நீங்கள் தான்
சினம் நீங்கள் கொண்டதில்லை பொறுமை இழுந்து நாம்
பார்த்ததில்லை சிரித்த முகத்துடன் தித்திக்க பேசிடுவீர் நாடி வருவோரிடம்
நயமாக நீங்கள் பேசி ஊர் போற்றும் நாயகனாய் உதவிகள் பல
செய்திடுவீர்
காலன் உங்களை பிரித்து தசாப்தம் ஆனதென்று எம்மால்
நம்பத்தான் முடியவில்லை, காலங்கள் உருண்டோடிப் பத்தாண்டு ஆனாலும்
சிந்தையில் உங்கள் உருவம் மறையவில்லை
அன்புடன் பேசி அனைவரையும் அரவணைப்பீர் யார் கண் பட்டதுவோ
காலன் உங்களை கவர்ந்து செல்ல புண்பட்ட எம் நெஞ்சை
ஆற்றுவார் யாருமில்லை
காலத்தின் கட்டளைதான் காலனின் அழைப்பு என நாங்கள்
வாழ்ந்திடுவோம் உங்களின் நினைவுடனே...