Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 FEB 1956
இறப்பு 17 FEB 2021
அமரர் நாகலிங்கம் பத்மநாதன் 1956 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!

ஒருபோதும் உம் கொள்கை
நம்வாழ்வில் என்றும் மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு நீங்காது அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்