3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் பஞ்சலிங்கம்
1960 -
2017
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பஞ்சலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் காத்தாயே!
பண்போடும் பணிவோடும் பாசமாய் வளர்த்தாயே!
நட்போடும் நலமோடும் நாளெல்லாம் வாழ்ந்தாயே!
வாழ்ந்த கதை சொல்லும் முன்னே- நீ!
வீழ்ந்த கதை வந்ததென்ன- எமக்கு
நேர்ந்த கதி என்னவென்று-
எம் நெஞ்சம் தான் அறியும்!
ஒன்றும் சொல்லாமல் உத்தமனே நீ போக!
உடைந்து போனதய்யா உள்ளம் தானிங்கு
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
நித்தம் எங்களை நிலைகுலைய வைத்தாயே!
காற்று போல நீ காணாமல் போனதனால்!
தோற்றுப் போனதய்யா நாம் தொடங்கிய எல்லாமே!
ஆண்டு மூன்று ஆனாலும் அன்பு கொண்ட உன் வதனம்
அருகில் இருப்பது போல்
உணர்கின்றோம் அன்பால் என்றும்!
தகவல்:
குடும்பத்தினர்