Clicky

தோற்றம் 20 MAY 1943
மறைவு 23 MAY 2025
திரு நாகலிங்கம் மகேந்திரன்
நிலஅளவையாளர்
வயது 82
திரு நாகலிங்கம் மகேந்திரன் 1943 - 2025 Brunei, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

C P YOGAESWARAN 28 MAY 2025 United Kingdom

நான் 'மஹென் அண்ணன்' என்று உரிமையுடனும் அன்புடனும் அழைக்கும் திரு நாகலிங்கம் மகேந்திரன் அவர்களது மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது. திரு மகேந்திரன் அவர்கள் எனது பெருமதிப்பிற்கும் பாசத்திற்குமுரிய மைத்துனர் காலம்சென்ற Dr. ரஞ்சன் அண்ணன் (Dr Ranjan Kailasapillai) அவர்களின் நெருங்கிய நண்பன் என்பதால் நானும் திரு மகேந்திரன் அவர்களை அண்ணன் என்றே உரிமையுடன் அழைப்பேன்.1996 September மாதத்திலிருந்து அவரது குடும்பத்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு Brunei நாட்டில் அமைந்தது. இசையில் மிகுந்த ஈடுபாடுடைய மகேந்திரன் அண்ணன் 1950 ஆண்டுகளிலிருந்து இலங்க்கையிலும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்த நாதஸ்வர, தவில் வித்வான்களை பற்றி மிகவும் சிலாகித்து பேசி மகிழ்வார்.1945 ஆம் வருடத்திலிருந்து வெளிவந்த தமிழ் படங்கள், அதன் நடிகர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்களை பற்றிய அறிவு அண்னனுக்கு மிகுந்திருந்தது. அவர்களைப்பற்றி நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டு இருப்போம். 2008 ஆம் ஆண்டின் பின் நான் லண்டனிலும் மகேந்திரன் அண்னன் கொழும்பிலும் வாழத்தொடங்க்கினோம். நானும் எனது மனைவி மற்றும் எனது பிள்ளைகள் கொழும்பிற்கு செல்லும் ஒவ்வொருதடவையும்ம மகேந்திரன் அண்னனிடம் போவதை பழக்கமாக கொண்டிருந்தோம். கடைசியாக போனவருடம் நானும் எனது மனைவியும் நீர்வேலிக்கு சென்று 2 மணி நேரம் இருந்து அண்ணனுன், மனைவி, மகன் சங்கருடன் கதைது பின் இந்தவருடம் வந்து ஒரு நாள் முழுவதும் அவர்களிடம் நிற்பதாக வாக்களித்து வந்தோம். தனது மனைவியையும் மகன்கள் கணேசன், சங்கரையும் மிகுந்த அக்கறையுடனும் பரிவுடனும் பராமரித்து வாழ்ந்த அண்னனின் மறைவு அவர்களுக்கு தாங்க்வொண்ணா துயரத்தையும் மனச்சஞ்ச்லத்தையும் அளிக்கப்போவதையிட்டு மனம் வருதுகிறேன். அண்ணன் மகேந்திரன் அவர்களது ஆத்மா சாந்தியடையவும், அவரது பிரிவால் கலங்கி நிற்கும் மனைவி, மகன்களின் துயரத்தை போக்கி ஆறுதல் அளிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அன்புடன் C P Yogaeswaran