யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு 6ம் வட்டாரம், திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-10-2024
ஓராண்டு கண்ணீர் அஞ்சலி
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் - அப்பா
கண்ணின் மணி போல்
எம்மை காத்த அன்புத் தெய்வமே - அப்பா
ஆறிடுமோ எங்கள் துயரம்
பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னும் நம்ப முடியாமல்
நாங்கள் இங்கு தவிக்கின்றோம்
முதலாவது ஆண்டு நினைவு நாள் வந்ததோ
எங்கள் தந்தையே ஒவ்வொரு நிமிடமும்
உங்கள் நினைவு தான் - அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே - அப்பா
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாகும் உங்கள் நினைவுகள்
நித்தமும் எங்களுடன் உயிர் வாழும் - அப்பா.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகின்றோம்...