Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 APR 1962
இறப்பு 29 MAR 2012
அமரர் நாகலிங்கம் ஜெகதீஸ்வரன் (ஜெகன்)
வயது 49
அமரர் நாகலிங்கம் ஜெகதீஸ்வரன் 1962 - 2012 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சங்கானை காளிகோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று
பத்து ஆண்டுகள் கழிந்தது இன்று
இதயம் கருகி இமைகள் நனைகிறது
உங்கள் பிரிவினிலே...

அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள்!

எங்களை பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!

எம்மை விட்டு நீங்கள் பிரிந்தாலும்
நினைவுகள் மட்டும் எம்மை விட்டு
எப்பொழுதும் நீங்காது...

உங்களை எம் வாழ்நாள்
உள்ளவரை எம் இதயத்தில்
வைத்து வாழ்வோம்!  

தகவல்: குடும்பத்தினர்