
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், சேமமடுவை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுந்தரம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(பாபு), ரமேஷ்குமார், பாலகுமார்(வவி), அன்புக்கரசி(மாவீரர்), மங்கையர்க்கரசி(லண்டன்), தமிழரசி, எழிலரசி(கனடா), காலஞ்சென்ற கலையரசி, சசிகுமார்(சதீஸ்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியம், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.