யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Keswick ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் கார்த்திகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்
கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா....
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
RIP my friend. We only got to meet a few time since our son married your daughter. I remember you helping me with dressing in your cultural dress for the ceremony.