

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசாதேவி பத்மநாதன் அவர்கள் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன்(தம்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெயந்தி(ஆசிரியர்- வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), ஜெயந்தன்(பிரான்ஸ்), சுகந்தி(வவுனியா), சுமதி(பிரான்ஸ்), ரமணி(கனடா), ரதினி(சட்டத்தரணி- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லோகநாதன்(இலட்சுமனன், தீபா ஜீவலரி- வவுனியா), சிவமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சத்திய சீலன், இன்பராஜன்(பிரான்ஸ்), முரளிதரன்(கனடா), சேரலிங்கம்(Dialog - கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணலெட்சுமி, தியாகராஜா(ஓய்வு பெற்ற அதிபர்), இரத்தினசபாவதி மற்றும் நடராசா(ஓய்வு பெற்ற அதிபர்), காலஞ்சென்றவர்களான சிவ ஈஸ்வரி, நமசிவாயம் மற்றும் இராசலட்சுமி, மாணிக்கவாசகர்(ஓய்வு பெற்ற பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தர்மபாலு, செல்வராணி மற்றும் மனோன்மணி, கமலாதேவி, காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் பாலசரஸ்வதி, காலஞ்சென்ற இராமச்சந்திரன் மற்றும் இராஜராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபாங்கி(BMS- Cambridge University Hospital, பிரித்தானியா), கிஷானி, கேசனா, கனியா(பிரான்ஸ்), மேனகன்(நியூ பிரியங்கா ஜீவலரி-கிளிநொச்சி), ததுசன்(பொறியியலாளர்), ரோசானா(University of Ruhunu), கயானா(University of Jaffna), கோகியன்(வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), சாருகன்(பிரான்ஸ்), கேசகி, மிதுலன்(கனடா), மகிரா(Methodist College, Colombo 3), துஷான்(Royal College, Colombo 7) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல 53, அம்மன் கோவில் வீதி,
பண்டாரிக்குளம்,
வவுனியா.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ரமணி,றதனிக்கு, அம்மாவின் இழப்பை அறிந்து துயரடைகிறோம். அம்மா எங்களுக்கு செய்த உதவிகளை மறக்க மாட்டோம். ஆத்மா சாந்தியடைய ஆண்டவரைப் பிரார்த்திக்கிறோம். உங்கள் Manning place...